குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஓரங்கட்டி சாதனை படைத்த மாஸ்டர் செஃப் – டாப் ஷோ லிஸ்ட் வைரல்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பீட் செய்யும் வகையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி முதல் இடத்தை பிடித்துள்ளது.

டாப் ஷோ லிஸ்ட்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து தான் விஜய் டிவிக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகளவு இருந்தது. புகழ், ஷிவாங்கி, மணிமேகலை மற்றும் பாலா செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் போனது. அதனால் தான் இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுக்க பிரபலமானது.

எப்பொழுது சனி, ஞாயிறு வரும் என்று பலரும் காத்திருந்தனர். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தான் தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வளவு பெரிய நடிகர் இந்த அளவுக்கு இறங்கி விட்டாரா?? என்று பலரும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கொண்டாடட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி பெற்ற டிஆர்பி ரேட்டிங்கை விட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி அதிக ரேட்டிங்கை பெற்றுள்ளது. முதல் இடத்தில் மாஸ்டர் செஃப், இரண்டாவது இடத்தில் குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சியும் இடம் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here