ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறப்பு – ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அறிவித்த பீகார் அரசு!!

0
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அனைத்து கடைகளும் , ஷாப்பிங் மால்களும், பார்க், வழிபாட்டு தளங்களும் மீண்டும் பழையபடி திறக்க அனுமதி அளித்துள்ளார். மேலும் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை ஊரடங்கில் அளித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. அதே போல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவிலும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட மாநிலமான பீஹாரிலும், தற்போது 1 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அனுமதி அளித்துள்ளார். அனைத்து கடைகளும் , ஷாப்பிங் மால்களும், பார்க்குகள், வழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
nithishkumar
nithishkumar
மேலும் சினிமா அரங்குகள், கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் பிஹாரில் 50% வாடியாளர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here