விஜய் டிவி டாப் 5 சீரியல் லிஸ்ட் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை ஓரங்கட்டிய புதிய சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் புதிதாக வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை நெருங்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.

விஜய் டிவி டாப் சீரியல்

விஜய் டிவியில் தற்போது சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல சீரியல்களை விஜய் டிவி களமிறக்கி வருகிறது. பொழுதுபோக்கு என்றாலே விஜய் டிவிக்கு ரசிகர்களிடத்தில் ஒரு தனி இடம் இருக்கும்.

பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல்கள் மட்டுமல்ல பல ஷோவும் களைகட்டி தான் வருகிறது.

தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியல் வேறு விஜய் டிவியில் அடியெடுத்துளளது. இதில் தீபக், தெய்வமகள் காயத்ரி, சித்தி சீரியல் யாழினி என பலரும் நடித்து வருகின்றனர். தீபக் இந்த சீரியல் மூலம் விஜய் டிவிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் டிவி சீரியலுக்கு ஆரம்ப காலத்திலேயே ரசிகர்கள் உருவாக ஆரம்பித்து விடுகிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்தில் டிஆர்பி லிஸ்டில் முதல் இடத்தில் வழக்கம் போல பாரதி கண்ணம்மாவும், அடுத்ததாக இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமியும் அடுத்ததாக ராஜா ராணி இடம் பிடித்துள்ளது.

அதே போல 4வது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடிக்க 5வது இடத்தை நூலிழையில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பிடித்துள்ளது. வந்த ஆரம்பத்திலேயே இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here