2022 பிளாப் மூவி லிஸ்ட்.., மண்ணை கவ்விய முக்கிய நடிகர்களின் படங்கள்!!

0
2022 பிளாப் மூவி லிஸ்ட்.., மண்ணை கவ்விய முக்கிய நடிகர்களின் படங்கள்!!

இந்த ஆண்டில்(2022) ரிலீசாகி படுதோல்வி அடைந்த டாப் 10 திரைப்படங்கள் குறித்த பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிளாப் படங்கள் லிஸ்ட்:

பொதுவாக தமிழ் சினிமாவில் தோல்வி ஆகிவிடும் என்று படங்களை யாரும் எடுப்பதில்லை. சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் படம் மண்ணை கவ்வும் அளவிற்கு செல்கிறது. அந்த வகையில் 2022ல் பல திரைப்படங்கள் வெளியாகின. அதில் சில படங்கள் ஹிட் கொடுத்தன, சில படங்கள் படு மொக்கையாகி பிளாப் ஆனது. அந்த பிளாப் ஆன படங்களில் டாப் 10 குறித்து ஒரு பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த லிஸ்டில் பர்ஸ்ட் இடத்தை பிடித்த திரைப்படம் “பிரின்ஸ்” தான். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து டாப்பில் இருந்த சிவகார்த்திகேயனை அசுர வேகத்தில் கீழே தள்ளியது.

தளபதி 67 படத்தில் இது கண்டிப்பாக இருக்கு.., அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்!!

இதற்கடுத்து 2வது இடத்தை தட்டி பறித்த திரைப்படம் தான் விக்ரமின் “கோப்ரா”. பல கெட்டப்புகள் போட்டு அசத்திய விக்ரம், கதையை தேர்ந்தெடுத்ததில் கொஞ்சம் கோட்டை விட்டார். அடுத்ததாக இந்த லிஸ்டில் 3வது இடத்தில் பொன்ராம் இயக்கிய “DSP” படம். இதனை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கிய காபி வித் காதல் 4வது இடத்தில் துண்டை போட்டுள்ளது. காதலை வேறு கோணத்தில் எடுத்து காட்டினாலும் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யவில்லை. இந்த லிஸ்டில் 5வது இடத்தில் இருப்பது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்திருந்தாலும், சொல்லுகிற அளவுக்கு படம் ஓடவில்லை. அதன் பிறகு 6வது இடத்தில் ஆர்யா நடித்த கேப்டன் திரைப்படமும், விஷாலின் வீரமே வாகை சூடும் படம் 7 வது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கடுத்து 8வது இடத்தில் விஜய் தேவரகொண்டாவின் லைக்கர் படம் இடம் பிடித்துள்ளது. மேலும் தி லெஜண்ட் திரைப்படம் 9வது இடத்திலும், விஷ்ணு விஷாலின் FIR படம் 10 வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here