மழைக்கால மருத்துவ முகாம்.., தமிழகம் முழுவதும் மொத்தம் 2000 பகுதிகளில்.., அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு!!

0
மழைக்கால மருத்துவ முகாம்.., தமிழகம் முழுவதும் மொத்தம் 2000 பகுதிகளில்.., அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவிப்பு!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தினசரி 4 பேருக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ அறிக்கை தெரிவித்து வருகிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அமைச்சர் மா. சுப்ரமணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நாளை 2,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெற இருக்கும் இந்த முகாமில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெறும் படி அரசு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here