பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!! நாளை தான் கடைசி, இதை பண்ணீட்டீங்களா?

0
பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!! நாளை தான் கடைசி, இதை பண்ணீட்டீங்களா?
பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் கவனத்திற்கு!! நாளை தான் கடைசி, இதை பண்ணீட்டீங்களா?

தமிழகத்தில் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் கல்வி பயில பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 10th, 12th மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் 10th, 11th, 12th தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட வாரியாக உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை (03.01.2023) மாலை 05.00 மணியுடன் முடிவடைகிறது.

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? இந்த குட் நியூஸ் உங்களுக்குத்தான்.., அரசு அதிரடி அறிவிப்பு!!

மேலும் நாளை விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதிக்குள் தத்கல் முறையில் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தத்கல் முறையில் விண்ணப்பிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் ரூ.500, 11th, 12th மாணவர்கள் ரூ.1000 என்றும் தேர்வு கட்டணத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here