Saturday, April 27, 2024

இன்றைய முக்கியச் செய்திகள் – சில வரிகளில்!!

Must Read

தலைப்பு செய்திகள் சில…
  • தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முடிவுற்ற ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை வேறு சில தளர்வுகளுடன் நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
  • இந்தியாவில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. இது குறித்த ஆய்வில் சராசரியாக ஒரு நாளைக்கு இந்தியாவில் 87 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
  • கடத்த 28 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட காரணத்தால் நாடு முழுவதிலும் எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று கருதி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • பல்கலை மற்றும் கல்லூரிகளில் அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது யுஜிசி மற்றும் AICTE விதிகளுக்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் AICTE தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகள் கழித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் பயணியர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து தற்போது மேலும் 7 சிறப்பு ரயில்கள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய மனுவிற்கு யு.பி.எஸ்.சி திட்டவட்டமாக தனது மறுப்பினை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் பருவமழை காரணமாக தொடுக்கப்பட்ட மனுவிற்கு தேர்வாணையம் இவ்வாறு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
  • தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவில் பல கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மேலும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
  • கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
  • பாபர் மசூதி வழக்கில் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் உள்ளனர்.
  • சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
  • பிரமோஸ் ஏவுகணை 400 கிலோ மீட்டர் அளவு தொலைவில் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
  • கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை அடைந்துள்ளது. இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 38,672 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -