நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122வது பிறந்தநாள் – சுதந்திர போராட்ட மாவீரன் வரலாறு

0
Nethaji Photo

இன்று இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் சுபாஷ் சந்திர போஸின் 122வது பிறந்தநாள் விழாவாகும். இந்நேரத்தில் அந்த ஒப்பற்ற தலைவனின் வாழ்க்கை வரலாறு குறித்துக் காண்போம்.

நேதாஜி பிறப்பு மற்றும் படிப்பு:

பிறந்த வருடம் – 1897, ஜனவரி 23
பிறந்த இடம் – அன்றைய பெங்கால் டிவிஷனில் இருந்த ஒரிசா
படிப்பு – இந்திய சிவில் சர்வீஸ் (1920, இங்கிலாந்து)
குடும்பம் – ஜெர்மனியில் எமிலி ஷென்க்ல் என்ற ஆஸ்திரிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனிதா போஸ் என்ற மகள் உள்ளார். இவர் ஜெர்மனியின் மிகப் பிரபலமான பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

காங்கிரஸ் தலைவர்

இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக 1921ல் தனது பதவியை ராஜினாமா செய்து இந்திய காங்கிரஸ் அணியின் இளைஞர் அணி தலைவர் ஆக இருந்தார். தனது விடாமுயற்சியால் 1938ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். பின்பு அஹிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

இந்திய தேசிய ராணுவம்

அஹிம்சையினால் மட்டும் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்காது என எண்ணிய நேதாஜி நாசி ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்பு ஜப்பானின் உதவியுடன் ”ஆசாத் ஹிந்த்” என்கிற “இந்திய தேசிய ராணுவத்தை” கட்டமைத்தார். இதன்மூலம் மலேசியா, சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவ படையை உருவாக்கினார்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

“உங்கள் ரத்தத்தை கொடுங்கள், சுதந்திரத்தை நான் பெற்றுத் தருகிறேன்” என்பது இவரின் புகழ்பெற்ற வாசகமாகும். இது பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தது. 1935ல் சுபாஷ் சந்திர போஸ் “இந்தியாவின் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

விலகாத மர்மம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஜப்பானிய விமானத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்தார். இருப்பினும் இது இன்னும் உறுதி செய்யப்படாமலே உள்ளது. விபத்திற்கு பிறகு இவர் சிறிது காலம் உயிருடன் இருந்தார் என்ற செய்தியும் உண்டு.

இந்த மாவீரனின் பிறந்தநாளில் அவரது திருவுருவப் படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்துவர். அவர் நினைவை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here