தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் நகைப்பிரியர்கள்!!

0

புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. தற்போது நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இதனால் நகை வாங்க முடியாமல் தவித்து வந்த மக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்:

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத அளவிற்கு உச்சத்தை தொட்டது. இதனால் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் நகை வாங்குவதற்கு பெரிதும் அச்சம் அடைந்தனர். மேலும் இன்னும் சில நாட்களில் தை மாதம் பிறக்க போகிறது. அந்த மாதங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் நகை வாங்க முடியாமல் மக்கள் கவலை அடைந்து வந்தனர். தற்போது நேற்று சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. அதே போல் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதனால் நகை வாங்குவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பகுதி நேர பணியை நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டம் – முதல்வர் வீட்டின் முன்பு குவிந்த ஆசிரியர்கள்!!

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ரூ.104 குறைந்துள்ளது. மேலும் 1 சவுரன் ஆபரணதங்கத்தின் விலை ரூ.38,336க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.13 குறைந்து ரூ.4,792க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 சவுரன் தூயத்தங்கம் இன்றைய நிலவரப்படி ரூ.114 குறைந்து ரூ.41,408க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிராம் தூயத்தங்கம் ரூ.13 குறைந்து ரூ.5,176க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை சிறிதளவு உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.74.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.74,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here