#IND vs AUS சிட்னி டெஸ்ட் – சொதப்பிய ரோஹித்!! கில் அரைசதம்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை இந்தியா விளையாடி வருகிறது. இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா பெரிய அளவில் சொற்பிக்காமல் ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் சுப்மங் கில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 338 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களை எடுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கில் அரைசதம்:

தற்போது இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்த ரோஹித் சர்மா இந்த போட்டியில் களமிறங்குகிறார். துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் கில் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை எடுத்து வந்தனர். இந்த ஜோடி 70 ரன்களை சேர்த்த நிலையில் ரோஹித் சர்மா ஹேசில்வுட் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 26 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றனார்.

ரோட்டில் விழுந்து கிடந்த வேணுவை காப்பாற்றும் கண்ணம்மா – பாரதியை சந்திப்பாரா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

அதன் பின் புஜாரா களமிறங்கியுள்ளார். ரோஹித் சென்ற நிலையில் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார் சுப்மங் கில். மேலும் 50 ரன்கள் எடுத்த நிலையில் கில், கம்மின்ஸ் பந்தில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். தற்போது கேப்டன் ரஹானே களத்திற்கு வந்துள்ளார்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 86\2
புஜாரா – 3
ரஹானே – 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here