தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

0
Gold
Gold

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவு அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சரியத் தொடங்கி உள்ளது. தற்போது கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெற்று வருவதால் தங்கம் விலை குறைவது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய விலை:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதைப் போல், தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த மாதத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா பாதிப்பால் தொழில் துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்ததே விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Gold Purchase
Gold Purchase

செப். 21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்நிலையில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 3 ரூபாய் குறைந்து ரூ. 4,885 க்கும், ஒரு சவரன் ரூ. 24 குறைந்து 39,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ. 69.80 ஆகவும், ஒரு கிலோ 69,800 ரூபாயாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here