TNTET நியமன தேர்வில் வயது வரம்பு சலுகை ?? அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

0
TNTET நியமன தேர்வில் வயது வரம்பு சலுகை..,அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!
TNTET நியமன தேர்வில் வயது வரம்பு சலுகை..,அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழக பள்ளிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக, தமிழக அரசு TNTET தகுதி தேர்வுகளை, நடத்தி வருகிறது. இந்த தகுதி தேர்வானது, TET PAPER 1 & 2 என இரு பிரிவுகளாக மேல் நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய நடத்தப்படுகிறது. இதில், TET PAPER 2 தேர்வானது, கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் தான் நடைபெற்று முடிந்தது.

இதற்கிடையில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர், பணி நியமனத்திற்காக,  நியமன தேர்வு எழுத வேண்டும் என அரசாணை 149 யை அரசு வெளியிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட TET தேர்வில், தேர்ச்சி பெற்ற பலர், பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த அரசாணை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த 149 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆசிரியர் பணிக்கு வயது வரம்பில் சலுகை வேண்டும் என்றும், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந்தித்து, TET தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அன்பில் மகேஷ், இந்த இரு கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக பரிசளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here