அரசு சார்பில் நர்சிங் பயிற்சி பள்ளி & கல்லூரிகள்.., மாவட்டம் தோறும் அமைக்க திட்டம்.., மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!!

0
அரசு சார்பில் நர்சிங் பயிற்சி பள்ளி & கல்லூரிகள்.., மாவட்டம் தோறும் அமைக்க திட்டம்.., மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!!
அரசு சார்பில் நர்சிங் பயிற்சி பள்ளி & கல்லூரிகள்.., மாவட்டம் தோறும் அமைக்க திட்டம்.., மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!!

தமிழகத்தில், 2023-2024 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் தாக்குதல் குறித்து, பல்வேறு விவாதங்கள் தமிழக சட்டசபையில் அரங்கேறியது. இதில், குறிப்பாக, உக்ரைன் நாட்டில் நடைபெற்ற போரில் இருந்து நாடு திரும்பி உள்ள தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்ப பட்டிருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், உக்ரைனில் இருந்து மாணவர்களை ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் தமிழகத்துக்கு, முதலமைச்சரின் நடவடிக்கையால் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த மருத்துவ மாணவர்கள், உக்ரைனில் படித்து வந்த பாடத்திட்டம் வேறு எந்த நாட்டில் கற்பிக்கப்படுகிறது என்பதை விசாரித்து, இதன் முடிவில், அந்த நாட்டிற்கே சென்று மாணவர்களை படிக்க வைப்பதற்காக, மத்திய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

TNTET நியமன தேர்வில் வயது வரம்பு சலுகை ?? அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!!

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி, கல்லூரிகளே அதிகம் இருப்பதாக கேள்வி எழுப்ப பட்டிருந்தது. இதற்கு மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது, ஒரு நர்சிங் பயிற்சி பள்ளி அல்லது கல்லூரி தொடங்குவதற்காக, மத்திய அரசான மோடியிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த இரு கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், விரைவில் செயல்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here