தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பேருந்துகள் – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!!

0

பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில் தமிழக போக்குவரத்துக்கு துறை மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மக்களின் தேவையினை அறிந்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை:

தமிழர் பண்டிகையான பொங்கல் அடுத்த மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களுக்கு வேலைக்காக குடிபெயர்ந்தவர்கள் இந்த பண்டிகையின் போது தங்கள் சொந்த ஊர்களுக்கும், கிராமத்திற்கும் செல்வது வழக்கம். அப்படி செல்ல அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய மக்களுக்கு வேண்டிய சலுகைகளை செய்து வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த மாதம் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய இன்று முதல் மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தற்போது தமிழகத்தில் 800 அரசு விரைவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. பண்டிகையின் போது மக்களின் தேவையினை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்!!

100 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் செயல்படலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டம் வைத்துள்ளது. முன்பதிவு செய்ய மக்கள் அரசு போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in இல் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here