விஜய் 65வது படத்தின் தலைப்பு இணையத்தில் லீக் – ஜோடி சேரப்போகும் நடிகை இவர்தான்!!

0

தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகராக இருப்பவர் இளையதளபதி விஜய். இவரின் மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவரின் 65வது படத்திற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில் அந்த படத்தில் யார் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விஜய் 65

இளைய தளபதி என்றாலே தமிழ் திரையுலகில் மாஸ் தான். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் விஜய்க்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் சில வருடமாக தொடந்து பல ஹிட் படங்களை கொடுத்து கொண்டிருக்கிறார் விஜய். சமீபத்தில் வெளியான பிகில் படம் கூட 2 கோடியை தாண்டி வசூல் செய்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மாஸ்டர் திரைப்படமும் எப்பொழுது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் தான் வெளியாகும் என பல வதந்திகள் வந்தது. ஆனால் இயக்குனர் லோகேஷ் இதனை மறுத்து திரையரங்கில் தான் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் கூறி வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படம் இப்படி நிலுவையில் இருக்க தளபதி 65 பற்றி சில நாட்களாக பல தகவல்கள் வெளியாகின. அதாவது இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக தவல்கள் வந்தன. இந்நிலையில் தளபதி 65 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர போகிறது என்பது உறுதியானது. மேலும் நேற்று கூட சன் பிக்சர்ஸ் ஒரு இதற்கான வீடியோ ஒன்றை கூட வெளியிட்டது.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி!!

இந்நிலையில் விஜய் 65 பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளன. இதில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு டார்கெட் ராஜா என்றும் பெயர் வைத்துள்ளனராம்.

இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் தான் இயக்கவுள்ளார். இவ்வாறு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31 இல் வெளியாகவுள்ளதாம். இந்த அப்டேட்களால் தளபதி ரசிகர்கள் சந்தோசத்தின் உச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here