TNPSC குரூப் 4: முக்கிய பொது தமிழ் வினாக்கள்…, 2014 யில் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா??

0
TNPSC குரூப் 4: முக்கிய பொது தமிழ் வினாக்கள்..., 2014 யில் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா??
TNPSC குரூப் 4: முக்கிய பொது தமிழ் வினாக்கள்..., 2014 யில் கேட்கப்பட்ட இந்த கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா??

TNPSC யின் குரூப் 4 தேர்வுக்கு, தீவிரமாக தயாராகி வரும் தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கில், 2014 ஆம் ஆண்டில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய பொது தமிழ் வினாக்களும், அதன் விடைகளும் கீழே தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. ‘கண்ணகி’ என்னும் சொல்லின் பொருள்

(A) கடும் சொற்களைப் பேசுபவள்

(B) கண் தானம் செய்தவள்

(C) கண்களால் நகுபவள்

(D) கண் தானம் பெற்றவள்

2. வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?

(A) பள்ளு

(B) தூது

(C) கலம்பகம்

(D) அந்தாதி

3. ‘மனித நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படுவது எது?

(A) ஆப்பிரிக்கா

(B) இலெமூரியா

(C) சிந்து சமவெளி

(D) ஹரப்பா

4. “சீர்திருத்தக் காப்பியம்’ என்று பாராட்டப்படுவது

(A) சிலப்பதிகாரம்

(B) மணிமேகலை

(C) வளையாபதி

(D) குண்டலகேசி

5. ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ என்னும் புகழ்மிக்க நகரம்

(A) மதுரை

(B) ஊட்டி

(C) கொடைக்கானல்

(D) ஏற்காடு

6. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ – என்று கூறியவர்

(A) ஒக்கூர் மாசாத்தியார்

(B) பொன்முடியார்

(C) காவற்பெண்டு

(D) ஒளவையார்

7. 1942- ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான ‘பர்மா வழி நடைப்பயணம்’ நூலின் ஆசிரியர்

(A) வைத்தியநாத சர்மா

(B) வெ. சாமிநாத சர்மா

(C) தேவன்

(D) அநுத்தமா

8. தவறான ஒன்றை தேர்க

(A) கிறு

(B) கிணறு

(C) ஆ நின்று

(D) இல

9. ‘ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்’ எனப் போற்றப்படுபவர்

(A) ஆண்டாள்

(B) பேயாழ்வார்

(C) பெரியாழ்வார்

(D) இராமானுஜர்

10. இதன் பட்டையை அரைத்து தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்

(A) முருங்கைப் பட்டை

(B) வேப்பம் பட்டை

(C) புளியம் பட்டை

(D) நாவற் பட்டை

11. தமிழ்ப் பேரகராதி – ‘லெக்சிகன்’ (Lexicon) உருவாக்கியவர்

(A) எஸ். வையாபுரிப்பிள்ளை

(B) வ.உ.சி.

(C) அ. சிதம்பரநாத செட்டியார்-

(D) வேங்கடராஜுலு ரெட்டியார்

12. தமிழிசைக் கருவி ‘யாழ்’ பற்றி பலகாலம் ஆராய்ந்து ‘யாழ் நூல்’ இயற்றியவர்

(A) சண்முகானந்தர்

(B) விபுலானந்தர்

(C) தேஜானந்தர்

(D) சுஜானந்தர்

இது போன்ற முக்கியமான பொது தமிழ் வினாக்களுடன், அதன் கூடுதல் தகவல்களையும் சேர்ந்து, அனுபவம் உள்ள ஆசிரியர்களை கொண்டு பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ரூ. 7,500 மதிப்பிலான இத்தகைய பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW  

மேலும் விவரங்களுக்கு

Call us at 8101234234

விடைகள்:

1. (C) கண்களால் நகுபவள்
2. (B) தூது
3. (B) இலெமூரியா
4. (B) மணிமேகலை
5. (A) மதுரை
6. (B) பொன்முடியார்
7. (B) வெ. சாமிநாத சர்மா
8. (D) இல
9. (D) இராமானுஜர்
10. (A) முருங்கைப் பட்டை
11. (A) எஸ். வையாபுரிப்பிள்ளை
12. (B) விபுலானந்தர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here