TNPSC தேர்வர்களே.., இந்த வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறதா என செக் பண்ணிக்கோங்க??

0
TNPSC தேர்வர்களே.., இந்த வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறதா என செக் பண்ணிக்கோங்க??
TNPSC தேர்வர்களே.., இந்த வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறதா என செக் பண்ணிக்கோங்க??

அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நினைவாக்க மாணவர்களாகிய நமக்கு இது ஒரு பொன்னான தருணம் என்றே சொல்ல வேண்டும். அதாவது வரும் நவம்பர் மாதம் குரூப் 4 தேர்வுக்கான தேதியை TNPSC அறிவிக்கயுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உதவும் விதமாக தற்போது இங்கு முக்கியமான சில வினா விடைகளை தொகுத்து கொடுத்துள்ளோம். இங்கு கொடுத்திருக்கும் வினாக்களுக்கு உங்களால் எந்த அளவுக்கு பதில் அளிக்க முடிகிறது என தெரிந்து கொள்ளுங்கள்.

1) பாரதிதாசன் நடத்திய கவிதை இதழ்

A) குயில் B) தேசபக்தன் C) விஜயா D) தென்றல்

2) ‘வேணி’ என்ற சொல்லின் பொருள் ?

(A) கிணறு B) சடை C) முதலை வகை D) மூங்கில்

3) காப்பர் சல்பேட் கரைசலின் வழியே மின்சாரத்தினை செலுத்தும் பொழுது நேர்மின் அயனியாக செயல்படுவது

(A) சல்பேட் B) மின் பகுளி C) காப்பர் D) மின்வாய்

4)பின்வரும் கூற்றினைக் கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

I. வைரங்கள் மினுமினுக்க முழு அக எதிரொளிப்பு, முக்கிய காரணம்.
II. முழு அக எதிரொளிப்பு நிகழ்வில் படுகோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தின் மதிப்பு மாறுநிலை கோணத்தை விட அதிகமாக இருக்கும்.

(A) முதல் கூற்று மட்டும் சரி. (B) இரண்டும் சரியானது (C) இரண்டாவது கூற்று மட்டும் சரி (D) இரண்டும் தவறானது.

5) ஒளி நேர்க்கோட்டில் செல்லும் பாதையானது

(A) கதிர் (B) எதிரொளித்தல் (C) விரிக்கற்றை (D) குவிகற்றை

6) 1000 மில்லி விநாடி

(A) 1 நிமிடம் (B) 1 விநாடி (C) 1 மைக்ரோ விநாடி (D) 60 விநாடி

7)வெப்பச்சலனத்தினால் ஏற்படும் நிகழ்வு

(A) கடல் பரப்பு குளிர்தல் (B) நிலம் சூடாதல் (C) காற்று வீசுதல் (D) சூரிய வெப்பம்

8) மத்திய அரசின் உழவர்களுக்கான ரூ.6000/- நிதியுதவி திட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டது ?

A) மத்திய பிரதேசம் B) உத்திரப் பிரதேசம் C) பீகார் D) தெலுங்கானா

9) தேர்தலில் பயன்படுத்தப்படும் அழிக்க இயலாத மையில் உள்ள வேதிப்பொருள்

A) வெள்ளி நைட்ரேட் B) பொட்டாசியம் நைட்ரேட் C) காரிய நைட்ரேட் D) அலுமினியம் நைட்ரேட்

10) இந்தியா முழுவதும் அவசர உதவிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரே எண் ?

A) 108  B) 1098  C) 112  D) 911

11) பீட்டர் டாமின் கிழக்கில் இருக்கிறார், டாம் ஜானின் வடக்கில் இருக்கிறார். மைக் ஜானின் தெற்கில் உள்ளது, பீட்டரின் எந்த திசையில் மைக் உள்ளது?

A)தென்கிழக்கு B)தென்மேற்கு C)தெற்கு D)வடக்கு-கிழக்கு

12) ஒரு குறிப்பிட்ட மொழியில், NOIDA OPJEB என குறியிடப்பட்டிருந்தால், அந்த மொழியில் டெல்லி எவ்வாறு குறியிடப்படுகிறது?

A) CDKGH B) EFMIJ C)FGNJK D)IHLED

இவ்வாறு நாங்கள் மேலே கொடுத்திருக்கும் இந்த வினாக்களுக்கு பதில் அளித்ததின் மூலம் நீங்கள் எந்த அளவிற்கு தேர்வுக்காக தயாராகி இருக்கிறீர்கள் என உங்களுக்கே இப்போது தெரிந்திருக்கும். இதுபோன்ற சிறந்த முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ய தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. நீங்களும் இந்த நிறுவனத்தின் வகுப்புகளில் சேர்ந்து தேர்வில் வெற்றி பெற கீழே கொடுத்துள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

மேலே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடை கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW 

மேலும் விவரங்களுக்கு Call us at 8101234234

விடைகள்;

1) A)குயில்

2) B) சடை

3) C) காப்பர்

4) B) இரண்டும் சரியானது

5) A) கதிர்

6) B) 1 விநாடி

7) C) காற்று வீசுதல்

8) B) உத்தரபிரதேசம்

9) A) வெள்ளி நைட்ரேட்

10) C) 112

11) B)தென்மேற்கு

12) B) EFMIJ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here