தமிழகத்தில் இவங்களுக்கு மட்டும் ரூ.216.20 கோடி மதிப்பில் உதவித்தொகை…, வெளியான முக்கிய அப்டேட்!!

0
தமிழகத்தில் இவங்களுக்கு மட்டும் ரூ.216.20 கோடி மதிப்பில் உதவித்தொகை..., வெளியான முக்கிய அப்டேட்!!
தமிழகத்தில் இவங்களுக்கு மட்டும் ரூ.216.20 கோடி மதிப்பில் உதவித்தொகை..., வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழக அரசானது, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 72,373 பயனாளிகளுக்கு ரூ.216.20 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, “இந்திராகாந்தி தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 37,521 முதியவர்களுக்கு ரூ.113.20 கோடியும், 5,957 விதவைகளுக்கு ரூ.19.61 கோடியும், 946 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.57 கோடியும் திருப்பூர் மாவட்ட வழங்கியுள்ளது. மேலும், உதவித்தொகை திட்டத்தின் கீழ் 12,945 விதவைகளுக்கு ரூ.32.61 கோடி, 10,756 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.33.60 கோடி, உழவா் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 677 பயனாளிகளுக்கு ரூ.2.31 கோடி என ஒட்டுமொத்தமாக 72,373 பயனாளிகளுக்கு ரூ.216.20 கோடி மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது” என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

TNPSC தேர்வர்களே.., இந்த வினாக்களுக்கு விடையளிக்க முடிகிறதா என செக் பண்ணிக்கோங்க??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here