அரசு பணியிடங்களில் 50% தான் நிரப்பப்படும் – TNPSC அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சி!!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ள அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்த பிறகே நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் குறித்த சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திட்டமிட்டு இருந்த பல தேர்வுகள் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் டிஎன்பிஎஸ்சி 2020 அட்டவணைப்படி நடத்தி முடிக்கப்பட்ட பல தேர்வுகளுக்கு இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. மேலும் மே மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய குரூப் 2, குரூப் 2a தேர்வு அறிவிப்புகளும், ஜூலை மாதம் இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் கால அட்டவணைப்படி தேர்வுகளுக்கு தயாராகி வரும் போட்டியாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இந்நிலையில் அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் பள்ளி, கல்லூரிகள் திறந்த பிறகே நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறுகிறது. ஆனால் மறுபுறம் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இதனால் தேர்வுகள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வருமான இழப்பை சமாளிக்க சிக்கன நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தற்போது டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்த தகவலின் படி, ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வுகளுக்கு அறிவிக்கப்பட்ட பணியிடங்களில் 50 சதவீதம் மட்டுமே நிரப்பப்படும். மேலும் கொரோனா பாதிப்பால் நடத்த முடியாமல் உள்ள தேர்வுகள் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என கூறியுள்ளார். டிஎன்பிஎஸ்சி இணையதளம் தேர்வர்களுக்கு அதிக சேவைகள் வழங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதனால் எளிமையான முறையில் தேர்வர்கள் விடைத்தாள்களை உரிய கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்த அதிகாரி, இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என கூறியுள்ளார். ஏற்கனவே குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here