தமிழகத்தில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம்  – மருத்துவர் குழு பரிந்துரை!!!

0
தொடர்ந்து 3 நாட்கள் பேருந்துகளில் இலவச பயணம் - மாநில அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
தொடர்ந்து 3 நாட்கள் பேருந்துகளில் இலவச பயணம் - மாநில அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்க மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பேருந்து சேவை இயக்கப்படவில்லை. தற்போது நோய்த்தொற்று குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி முடிவைடைவதால் முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய அதிகாரிகள் உடனும் மருத்துவர் குழு உடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர் குழு தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என்றும் தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், வணிகர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. அதோடு தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்க தமிழக முதல்வரிடம் மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here