புதிய சாதனை படைத்த பாரதி கண்ணம்மாவின் திருமண எபிசோடு – 2 வருடங்கள் கடந்தும் பரவிய புகழ்!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங்கில் எகிறிக்கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மீண்டும் ஒரு சாதனையை படைத்து இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது சேருவார்கள் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். ஏனெனில் ஆரம்பத்தில் இவர்களை போல ஜோடி இருக்க முடியுமா?? என்னும் அளவிற்கு வாழ்ந்து வந்தனர்.

கண்ணம்மா வீட்டில் சித்தி கொடுமையில் வாடி கொண்டிருக்க, பாரதி வானத்தில் இருந்து குதித்தது போல கண்ணம்மாவின் வாழ்க்கையில் நுழைந்தார். கண்ணம்மா பின்னாடியே சுற்றி கடைசியில் திருமணமும் செய்து கொண்டார். ஆரம்பத்தில் கண்ணம்மா சண்முகத்தின் மகள் என்று யாருக்குமே தெரியாது.

சௌந்தர்யாவிற்கு கருப்பு நிறம் பிடிக்காததால் கண்ணம்மாவை முழுமையாக வெறுத்து வந்தார். பல கொடுமைகளை செய்தார். கடைசியில் பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்துக்கொள்வார் என்று யாருமே நினைத்தும் பார்க்கவில்லை.

இப்பொழுது பாரதி கண்ணம்மா எவ்வளவு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளதோ அதே போல தான் 2019 இல் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் நடந்த திருமண எபிசோடு டாப் ஹிட் அடித்தது. தற்போது அந்த எபிசோடு தான் 2019 இல் அதிக அளவு புகழ் பெற்ற எபிசோடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அந்த திருமண புகைப்படமும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here