இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று மழை காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
நேற்று முழுவதும் மழை பெய்ததால் ஆட்டத்தில் டாஸ் கூட போட முடியாத சூழல் உருவானது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது இப்போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து இருக்கின்றனர்.
தற்போது நியூசிலாந்து அணி டாஸ் வென்று இந்தியாவிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இந்தப் போட்டியில் ஐசிசி கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு ரூ.11.75 கோடி வழங்கப்படும்.
இரு அணி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:
இந்தியா அணி வீரர்கள்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, அஜிங்யா ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா.
நியூசிலாந்து அணி வீரர்கள்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிவான் கான்வே, டாம் லாதம், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் அல்லது வில் யங், வாட்லிங், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, நீல் வாக்னெர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்