தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 12 ல் திறப்பு?? வெளியான தகவல்!!

0
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 12 ல் திறப்பு?? வெளியான தகவல்!!
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 12 ல் திறப்பு?? வெளியான தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து, பொது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பல்வேறு அறிவுரைகளையும் அரசு அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும், கடந்த மே 24ம் தேதி முதல் அதிகரித்து வரும் வெப்ப அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து, தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கு ஏற்றார் போல, தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்தும் வருகிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கமானது 100 டிகிரி செல்சியஸை தாண்டிய வருகிறது. இதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கோடை விடுமுறையை நீட்டித்து அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 7ம் தேதி புதிய வகுப்புகள் தொடங்கும் என அறிவித்திருந்தார்.

IPL 2023 CSK vs GT: இறுதிப் போட்டிக்கு இவர்கள் மட்டும் தான் அனுமதி…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

ஆனால், தற்போது வழக்கத்தை விட கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வருவதால் மாணவர்களின் பெற்றோர் பலர் கூடுதலாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து, இந்திய தேசிய லீக் தலைவர் முகமது சுலைமான் வெளுத்து வாங்கும் கோடை வெயிலால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிய ஆண்டுக்கான பள்ளி திறப்பை ஜூன் 12ம் தேதி ஒத்தி வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here