இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரின் தற்போதைய பெறும் எதிர்பார்க்கப்பாக இருப்பது தீபாவளி பண்டிகை தான். வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெரும் வருத்தமாக இருந்தது. இவர்களுக்காகவே, தமிழக அரசானது அதிரடி அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டது.

அதாவது, தீபாவளிக்கு மறுநாள் (நவம்பர் 13) திங்கட்கிழமை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், வரும் நவம்பர் 11 (சனிக்கிழமையும்) பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தீபாவளிக்காக பள்ளி மாணவர்கள் நவம்பர் 11 முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை 3 நாட்கள் தொடர் விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.