தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் – மீறினால் ரூ. 500 அபராதம்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் ரூ. 500 அபராதம்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் ரூ. 500 அபராதம்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் இனி பொது இடங்களில், மக்கள் முக கவசம் அணியாவிட்டால்,  500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

அதிரடி பேட்டி:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலுக்கு பின், மாநிலத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது போக, இதுவரை அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும், விலக்கிக் கொள்ளப்படுவதாக  அண்மையில் அறிவிக்கப்பட்டது. தற்போது கடந்த சில தினங்களாக, டெல்லி, ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் எடுத்துள்ளது.

டெல்லியில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த நிலையில் தமிழகத்திலும், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது குறித்த, அதிரடி உத்தரவை மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here