தமிழகத்தில் இந்தத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்., ரூ.3000 வழங்க முடிவு! அரசு உத்தரவு!!

0
தமிழகத்தில் இந்தத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்., ரூ.3000 வழங்க முடிவு! அரசு உத்தரவு!!
தமிழகத்தில் இந்தத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்., ரூ.3000 வழங்க முடிவு! அரசு உத்தரவு!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 3000 கருணை கொடை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவு:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதேபோல் கிராம கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் 3,000 லிருந்து 4,000ஆக உயர்த்தப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக திருக்கோயில்களில் பணிபுரியும் முழு மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களுக்கு ஆப்பு.,இனி இதையெல்லாம் மறந்தும் Status ல வச்சுடாதீங்க!!

அதாவது, இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணைக்கொடை ரூபாய் 2,000லிருந்து 3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here