
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பேண்ட் சட்டையும், ஆசிரியைகள் சேலை கட்டுவதும் வழக்கம். இருந்தாலும் ஒரு சில ஆசிரியைகளுக்கு சேலை அணிவது வசதியாக இல்லாததால் சுடிதார், சல்வார் கமீஸ், சேலை உள்ளிட்ட பாரம்பரிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் கொண்ட உடைகளில் ஏதேனும் அணிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு அரசாணை எண்.67 ல் குறிப்பிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அரசாணை பிறப்பித்தது பலருக்கும் தெரியாததால், தெரிந்த சில ஆசிரியைகள் சுடிதார் போட்டு பள்ளிக்கு சென்றால் சக ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் அணிந்து வரக்கூடாது என அறிவுறுத்துவதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அரசாணை எண்.67 தொடர்பான விவரங்களை அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களே உஷார்.., நாளை 16 மாவட்டங்களில் அடித்து ஊற்ற போகும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!