தமிழகத்தில் மருத்துவர்கள் அதிரடி ஸ்டிரைக் – குடும்பத்துடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்! நோயாளிகள் அவதி!!

0
தமிழகத்தில் மருத்துவர்கள் அதிரடி ஸ்டிரைக் - குடும்பத்துடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்! நோயாளிகள் அவதி!!

தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி , 500க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

டாக்டர்கள் போராட்டம் :

தமிழகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அரசாணை 354 ன் படி ஊதிய உயர்வு கோரி அரசு டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2019 ல், மருத்துவர்கள் மேற்கொண்ட இந்தப் போராட்டத்தில் ஸ்டாலின் நேரில் ஆதரவு கொடுத்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அரசு வெளியிட்ட அரசாணை 344 அமல்படுத்த மாட்டோம் என்றும், ஆட்சிக்கு வந்த பின் சிறு தொகையை மட்டும் தருகிறோம் என வாக்கு அளித்தார். ஆனால் தற்போது, அந்த சிறு தொகையும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்யும் மருத்துவருக்கு கிடைக்காது என சொல்லப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அகவிலைப்படி 38% உயர்த்த முடிவு! அதிகாரப்பூர்வ உத்தரவு!!

இதனால் 354 ன் படி தங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனை வலியுறுத்தி நேற்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தில் இறங்கினர். மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தால் நோயாளிகள் அவதி பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here