ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.,65.44 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – பொதுமக்கள் பீதி!!

0
ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.,65.44 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை - பொதுமக்கள் பீதி!!
ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.,65.44 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை - பொதுமக்கள் பீதி!!

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.44 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

65.44 லட்சம் பேர் பலி;

2019 ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டிப் படைக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு 3 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு எதிராக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும், தற்போது வரை உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடிலை. இருப்பினும் இந்த பாதிப்பில் இருந்து நம்மை காத்து கொள்ள, தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு ஆகும். இந்த வகையில் மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை அவசியம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பேரில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், குணமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 621,555,558 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 601,696,552 பேர் குணமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் – அகவிலைப்படி 38% உயர்த்த முடிவு! அதிகாரப்பூர்வ உத்தரவு!!

இதையடுத்து மிகவும் வருத்தமான தகவலாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,544,470 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 39,721 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here