ஜெயா இறப்பில் மர்மம்.,ஒரே திருக்குறளில் மொத்தத்தையும் சொன்ன விசாரணை ஆணையம்! பொதுமக்கள் ஷாக்!!

0
ஜெயா இறப்பில் மர்மம்.,ஒரே திருக்குறளில் மொத்தத்தையும் சொன்ன விசாரணை ஆணையம்! பொதுமக்கள் ஷாக்!!
ஜெயா இறப்பில் மர்மம்.,ஒரே திருக்குறளில் மொத்தத்தையும் சொன்ன விசாரணை ஆணையம்! பொதுமக்கள் ஷாக்!!

தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது அறிக்கை முடிவில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு, மக்களை ஷாக் ஆக்கியுள்ளது.

முடிவில் திருக்குறள்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்களுக்கு மேலாக நடந்த சிகிச்சை, பலன் அளிக்காமல், அதே ஆண்டு டிச.5 ஆம் தேதி அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இவரது இறப்பில் மர்மம் நீடிப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால், முன்னாள் அதிமுக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்த நிலையில், இது குறித்த விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடந்தது. அப்போது, மருத்துவமனை அறிக்கைக்கும், விசாரணை அறிக்கைக்கும் பல முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணை அறிக்கையின் முடிவில் ஒரு முக்கிய திருக்குறளை வைத்துள்ளது.

அதாவது “காலாழ் களரில் நரியிடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு” என்பதே அந்த திருக்குறள். இதன் அர்த்தம் என்னவென்றால் பாகனுக்கு அஞ்சாத, வேல் வீரர்களை தன் தந்தங்களைக் கொண்டு குத்திக் கிழிக்கும் யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், வஞ்சக நரிகளும் அவற்றை கொன்றுவிடும் என்பதுதான்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்(19.10.2022) தீபாவளிக்கு சூப்பர்  சர்பரைஸ்.., இப்போவே  கிளம்புங்க  மக்களே!!

இதை வைத்துப் பார்க்கும்போது, சூழ்ச்சிகளால் ஜெயா கொல்லப்பட்டாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த செய்தி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here