Home விளையாட்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று பலப்பரீட்சை.,ரோஹித் பிளான் என்ன? இது தான் பிளேயிங் லெவன்??

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று பலப்பரீட்சை.,ரோஹித் பிளான் என்ன? இது தான் பிளேயிங் லெவன்??

0
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று பலப்பரீட்சை.,ரோஹித் பிளான் என்ன? இது தான் பிளேயிங் லெவன்??

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை செய்ய உள்ளது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காணலாம்.

IND vs NZ:

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி, டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இன்று பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியானது ஆஸ்திரேலியாவில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற உத்வேகத்துடன் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால், நியூசிலாந்து அணி கடந்த பயிற்சி ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 98 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியை தழுவியது. இதனால், இன்றைய போட்டியில் எழுச்சி கண்டு, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில், இந்தியாவின் பிளேயிங் லெவனில், சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கே எல் ராகுல், சூர்யகுமார், விராட் கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் களமிறங்குவார்கள்.

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா கேப்டன் மாற்றம்…, ஏமாற்றத்தில் டேவிட் வார்னர் ரசிகர்கள்!!

மேலும், கடந்த சில போட்டிகளில் தனது பார்மை தொலைத்து நிற்கும் ரோஹித் சர்மா இந்த போட்டியை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரை தொடர்ந்து, விக்கெட் கீப்பிங்கில் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்டியா, வேக பந்து வீச்சில் புவனேஸ்வர், ஷமி, ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் சுழலில் அஸ்வின் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியை முடித்த பிறகு இந்திய அணி நேரடியாக வரும் 23ம் தேதி பாகிஸ்தானை உலக கோப்பையில் எதிர்கொள்ள இருக்கிறது.

image.png

இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா(சி), கே எல் ராகுல், விராட் கோஹ்லி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர், ஷமி, அர்ஷ்தீப் சிங், அஸ்வின், ஹர்ஷல் படேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here