இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.., விரைவில் முடியும் சன் டிவியின் பேமஸ் சீரியல்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.., விரைவில் முடியும் சன் டிவியின் பேமஸ் சீரியல்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்.., விரைவில் முடியும் சன் டிவியின் பேமஸ் சீரியல்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

சின்னத்திரையில் TRP ரேட்டிங்கில் பட்டையை கிளப்பி வரும் சன் டிவியின் பிரபலமான சீரியல் ஓன்று விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

ரோஜா:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களுக்கு மத்தியில் ‘ரோஜா’ சீரியல் மக்களின் பெரும் ஆதரவை பெற்ற சீரியலாக உள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ரோஜா’ சீரியல் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் கதையில் எவ்வித சுவாரசியமும் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. முக்கியமாக இந்த தொடரை ரசிகர்கள் ரோஜா-அர்ஜுன் ஜோடியின் காதல் காட்சிகளுக்காகவே பார்க்கின்றனர். மேலும் இவர்கள் சின்னத்திரையின் “ரொமான்டிக் ஜோடி” என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடரில் அர்ஜுன் கேரக்டரில் நடித்து வரும் சிபு, சீரியலை விட்டு விலகுவதாக இணையத்தில் அறிவித்தார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, சிபுவை சீரியலை விட்டு விலக வேண்டாம் என இணையத்தில் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர். ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் புரிந்து கொண்ட சிபு மீண்டும் சீரியலில் இணைந்தார்.

அநியாயம் செய்யும் மகாலட்சுமி.,கூட்டு சேர்ந்த ரவீந்தர் – புதுமண தம்பதியின் மிட் நைட் அலப்பறைகள் லீக்!!

இந்நிலையில் தற்போது தொடரில் ரோஜாவை கொலை செய்ய முயற்சி செய்த ஷியாம் குரூப்பை பழிவாங்க வேண்டும் என்று அர்ஜுன் ஆக்சன் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இப்படி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த ரோஜா சீரியல் விரைவில் முடிவடைய போவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here