உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா கேப்டன் மாற்றம்…, ஏமாற்றத்தில் டேவிட் வார்னர் ரசிகர்கள்!!

0
உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா கேப்டன் மாற்றம்..., ஏமாற்றத்தில் டேவிட் வார்னர் ரசிகர்கள்!!
உலக கோப்பைக்கான ஆஸ்திரேலியா கேப்டன் மாற்றம்..., ஏமாற்றத்தில் டேவிட் வார்னர் ரசிகர்கள்!!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கேப்டனாக பட் கம்மின்ஸை கிரிக்கெட் வாரியம் அறிவித்ததை அடுத்து, டேவிட் வார்னரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய கேப்டன்:

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக சர்வதேச அணிகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா ஆரோன் பின்ச் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்த உலக கோப்பை தொடருக்கு முன்பே ஆரோன் பின்ச் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், இவரது இடத்தை பூர்த்தி செய்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (CA) தீவிரமாக இறங்கியது. இதில், டேவிட் வார்னர், ஸ்மித் மற்றும் டெஸ்ட் தொடர்களின் கேப்டனான பட் கம்மின்ஸ் ஆகிய மூவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன. இந்நிலையில் தான், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கேப்டன் பதவிக்கு தடை செய்யப்பட்ட டேவிட் வார்னர் மீதான தடையை ரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருப்பேன்.., இந்திய வீரர் பளீச் பேட்டி.., T20WC பற்றி எகிறும் எதிர்பார்ப்பு!!

இதனால், டேவிட் வார்னர் தான் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் தொடரின் கேப்டனாக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக டெஸ்ட் தொடர் கேப்டன் பட் கம்மின்ஸை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இவர் தான், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கும் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேப்டன்சி மாற்றத்தால், டேவிட் வார்னர் மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here