இன்று முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் – முதல்வர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பு உள்ளார்.

இ பாஸ் பெற வழி:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கி வருவதாக அடுக்கடுக்காக புகார்கள் வந்தது. இதனால் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிமையாக்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

tn e pass
tn e pass

இந்நிலையில் வரும் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். தவிர்க்க இயலாத காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்குமாறு பொதுமக்களை முதல்வர் கேட்டுக்கொண்டு உள்ளார். முக்கிய பணிகளுக்கு வெளியூர்களுக்கு செல்லும் மக்கள் எவ்வித தடையும் இன்றி பயணிக்க ஏதுவாக இந்த தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது.

திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காகவே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) இன்று (17.8.2020) முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here