நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

0

இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ட்வீட் செய்ததற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு:

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்புவதில் சிரமங்களை எதிர்கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை ஒழுங்காக விசாரிக்காதது மற்றும் பீம் கோர்கென் வன்முறை வழக்கு உள்ளிட்டவை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ட்வீட் செய்து இருந்தார். இது குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து வழக்கு – ஆகஸ்ட் 18க்கு ஒத்திவைப்பு!!

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற விசாரணையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன் தண்டனை விபரம் ஆகஸ்ட் 20ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. பொதுவாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here