தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல குவிந்த மக்கள் – 5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதால் ஸ்தம்பித்த தமிழகம்!!

0
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல குவிந்த மக்கள் - 5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதால் ஸ்தம்பித்த தமிழகம்!!
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல குவிந்த மக்கள் - 5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதால் ஸ்தம்பித்த தமிழகம்!!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடியதால், தமிழகம் ஸ்தம்பித்தது.

பொதுமக்கள் கூட்டம்:

தீபாவளி பண்டிகை நாளை, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்கான இறுதி கட்ட, ஷாப்பிங்கில் பொதுமக்கள் இறங்கியுள்ளனர். இந்த தீபாவளி ஸ்பெஷல் பரிசாக மத்திய மாநில மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் தொடர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக, ஷாப்பிங் செய்ய பொது இடங்களில் கூடுவதால் கூட்டம் அலைமோதுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது போக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்து நிலையம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக சென்னையிலிருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு ஒரே நேரத்தில் குவிந்தனர்.

தீபாவளி ஸ்பெஷலாக பண பரிசை வழங்கவுள்ள அரசு – மகிழ்ச்சி வெள்ளத்தில் ஊழியர்கள்!

இதனால், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை சமாளிக்க காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகளின் சிரமத்தைப் போக்க சிறப்பு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டண வசூலித்ததாக பயணிகள் குற்றம் சுமத்தினர். இன்றும் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்பதால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here