
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே கேஸ் சிலிண்டரின் (சமையல் எரிவாயு) விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் மாற்றம் செய்யப்படும் இந்த கேஸ் சிலிண்டரின் விலையானது, வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாடு என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி, இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி என்பதால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலையானது ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதே போல, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையானது ரூ. 200 குறைக்கப்பட்டு ரூ.918.50க்கு விற்பனையாக உள்ளது.
தமிழகத்தில் இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!
கேஸ் சிலிண்டர் விலை | ||
மாதம் | வீட்டு உபயோகம் | வணிக பயன்பாடு |
மே | ரூ.1,118.50 | ரூ.2,024 |
ஜூன் | ரூ.1,118.50 | ரூ.1,937 |
ஜூலை | ரூ.1,118.50 | ரூ. 1945.5 |
ஆகஸ்ட் | ரூ.1,118.50 | ரூ.1,852.50 |
செப்டம்பர் | ரூ.918.50 | ரூ.1,695 |