தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்திற்கு கமிட்டாகி உள்ளார். இதை தளபதி பிறந்தநாள் அன்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் படத்தை குறித்து வெங்கட் பிரபு முக்கியமான அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு தளபதி 68 படத்தின் லுக்கிற்காக சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெங்கட் பிரபு பதிவிட்டு, “welcome on the future” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Welcome to the future!!! #Thalapathy68 @actorvijay @archanakalpathi pic.twitter.com/snWrqMEjfU
— venkat prabhu (@vp_offl) August 31, 2023