ஏ.ஆர்.ரகுமான் தாயார் திடீர் மரணம் – இரங்கல் தெரிவித்த முதல்வர்!!

0

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வரும் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் தாயார் இறப்பு

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது, உலக இசைத்துறையிலும் மிக பெரும் ஆளுமையாக விளங்குபவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் அதன் பிறகு தமிழ் திரையில் மட்டுமல்லாது, உலக இசையிலும் பல உச்சங்களை தொட்டுள்ளார். பல்வேறு மாநில, தேசிய விருதுகளை பெற்றுள்ள அவர், இந்திய சினிமாவின் மாபெரும் கனவான ஆஸ்கார் விருதினை தனது இசையின் மூலம் தட்டி சென்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது இசையின் மூலமாக மட்டுமன்றி, எளிமையான நடவடிக்கைகள் மூலமும் அனைவரையும் கவர்ந்தர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். திரை இசைக்கலைஞராக இருந்த அவரது தந்தை சிறிய வயதில் இறந்த பிறகு, மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையின் மேல் இருந்த தணியாத ஆர்வத்தினால் இளையராஜாவிடம் வேலைக்கு சேர்ந்தார்.

பல படங்களில் இளையராஜாவின் இசை குழுவில் ஒருவராக தனது இசை பயணத்தை ஆரம்பித்த அவர் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். அவர் தனது தாயார் கரீமா பேகத்தின் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். தனது இன்றைய நிலைக்கு இறைவனும், தனது தாயாருமே காரணம் என்று அவர் பலமுறை கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்த ரஹ்மானின் தாயார் அவர்கள் இன்று சென்னையில் காலமானார்.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைத்துறையினர், இசைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனி சாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் “இசைத்துறையின் ஜாம்பவான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரகள் தாயார் கரீமா பேகம் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் எனவும், அவரது மறைவினால் துயரத்திலிருக்கும் ரஹ்மான் அவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here