இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை – CoWin செயலி மூலம் கண்காணிப்பு!!

0

கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதில் அனைத்து நாடுகளும் தயாராக உள்ளது. மேலும் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகையை இந்தியா தொடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

நாட்டில் கடந்த  ஓராண்டாகவே  கொரோனா என்னும் வைரஸ் அனைவரையும் பாதித்து வருகிறது . மேலும் 1 ஆண்டு ஆகியும் உலக நாடுகள் அனைத்தும் இன்னும் கொரோனா வைரஸில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. தற்போது ஒவ்வொரு நாடும் தடுப்பூசி வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளார்கள். இந்தியாவில் கொரோன தடுப்புசி போடுவதற்கான ஒத்திகை ஆரம்பித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த ஒத்திகையை CoWin என்னும் செயலி மத்திய அரசு கண்காணித்து வரும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் இதற்கான ஒத்திகை பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்றுவருகிறது. இதற்காக சுமார் 7000 பேர் ஒத்திகையில் கலந்துகொண்டுள்ளனர். மேலும் தடுப்பூசி போடுவதற்காக 2,360 மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

corona vaccine
corona vaccine

இதில் கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக கொண்டு செல்வது, குளிரூட்ட பகுதிகளில் சேமிப்பது, மருத்துவமனையில் விநியோகிப்பது, மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கும், அதன் பின் ஏற்படும் விளைவுகள் மற்றும் சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதற்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒத்திகையில் ஏற்படும் நிகழ்வுகளை இந்த செயலி மூலம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here