இணையத்தில் ட்ரென்டாகும் ‘குட்டி தல’ புகைப்படம் – வைரலாக்கும் அஜித் ரசிகர்கள்!!

0

தல அஜித்தின் காதல் மனைவி ஷாலினியும், மகன் ஆத்விக்கும் ஹோட்டல் ஊழியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தல அஜித்

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித் குமார். எப்போதும் எளிமையாக இருப்பதை விரும்பும் அவர் தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று அவ்வப்போது புகைப்படங்களை எடுத்துக்கொள்வார். அவரது மனைவி ஷாலினியும், மகள் அனோஷ்காவும், மகன் ஆத்விக்கும் கூட அப்படியே அஜித் மாதிரி மிகவும் எளிமையாக அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மகன் ஆதிவிக் பிறந்ததிலிருந்தது அவரை குட்டி தல என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். ரசிகர்களுடன்அஜித் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டிடாடி தீர்ப்பார்கள். சில நாட்களுக்கு முன்பு ஷாலினியும் அனோஷ்காவும் ஒரு நடைபாதை கடையில் உணவு வாங்கும் போட்டோ வைரலானது.

அது போல தற்போது ஷாலினியும், ஆத்விக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தனர். அங்கு பணிபுரியும் அஜித் ரசிகரான ஊழியர் ஒருவரின் விருப்பத்தை ஏற்று அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அழகாக புன்னகைத்தபடி இருக்கும் ஷாலினியும் ஆத்விக்கும் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளனர். “பையன் நல்ல வளர்ந்துட்டான்” என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவதுடன் அதை அதிக அளவில் பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here