தமிழக  மகளிருக்கு ரூ.1000.., அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் முக்கிய  ஆலோசனை  கூட்டம்!!

0
தமிழக  மகளிருக்கு ரூ.1000
தமிழக  மகளிருக்கு ரூ.1000

தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பட்ஜெட்

இந்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மார்ச் 20 ஆம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இந்த திட்டத்தில் யார் யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதன் படி சொந்த வீடு இல்லாதவர்கள், தின கூலி வேலை பார்ப்பவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், பி.எச்.எச்., ஏ.ஏ.ஒய் என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு., இதுதான் உண்மை நிலவரம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

இது குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யார் யார் பயன்பெறலாம் என்பது குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here