தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு., இதுதான் உண்மை நிலவரம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

0
தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு., இதுதான் உண்மை நிலவரம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!
தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு., இதுதான் உண்மை நிலவரம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று (மார்ச் 13) தொடங்கியது. சுமார் 3,225 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8.75 லட்சம் பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை நேற்று தெரிவித்து இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து காலை 10 மணியளவில் தொடங்கிய தமிழ் முதல் தாள் தேர்வு மதியம் 01.15 மணி வரை நடைபெற்றது. இதில் பிட் அடிப்பது, பேப்பர் மாற்றுதல் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 3100 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தேர்வு மையங்களில் அவ்வப்போது வந்து சோதனை செய்ததில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(14.03.2023) – முழு விவரம் உள்ளே!!

அதேபோல் தேர்வு முடிவடைந்து வெளிவரும் பெரும்பாலான மாணவர்கள் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் ஈசியாக இருந்ததாக தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து நாளை (மார்ச் 15) ஆங்கில மொழித்தேர்வு நடைபெற உள்ளது. இப்படியாக ஏப்ரல் 3ம் தேதியுடன் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற உள்ளது. மேலும் இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 முதல் மே 5ம் தேதி வரை நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here