தமிழகத்தில் 11 & 12ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு – 92.3% மாணவர்கள் தேர்ச்சி!!

0
HS students TN

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 11 மாற்றம் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தமாக 92.3% மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆனது. 12ம் வகுப்பில் கடைசி தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான விதிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எவ்வித முன்னறிவிப்பும் இன்று 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பில் அரியர்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் அரசின் இணையதளங்களான tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த முறை 94.80% மாணவிகளும், 89.41% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் மாணவர்களை விட 5.39% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

டாப் 3 மாவட்டங்கள்:

திருப்பூர் – 97.12% தேர்ச்சி
ஈரோடு – 96.99% தேர்ச்சி
கோவை – 96.39% தேர்ச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here