பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5000 பரிசு – கர்நாடகா அமைச்சர் அறிவிப்பு..!

0

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ‘பிளாஸ்மா திரவியம்’ வழங்கினால் ரூ. 5000 பரிசு தொகை வழங்கப்படும் என கர்நாடக அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் செய்தால் பரிசு..!

கர்நாடகத்தில் கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் முழு ஊரடங்கும் பல பகுதிகளில் பாதி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 3,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 87 பேர் இறந்துள்ளனர். தொற்று பரவாமல் தடுக்க, அரசு தரப்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

plasma therapy treatment
plasma therapy treatment

இது தொடர்பாக, மாநில மருத்துவ கல்வி துறை அமைச்சர் சுதாகர் முகநூல் மூலம் பேட்டி அளித்துள்ளார், நேற்று வரை மாநிலம் முழுவதும் 17 ஆயிரத்து 370 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு பிளாஸ்மா திரவியம்’ வழங்கி அவர்கள் குணமடைய உதவ வேண்டும். பிளாஸ்மா திரவியம் வழங்குபவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் அரசு தரப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பெங்களூரில் அனைத்து பூத்களிலும் கொரோனா பரவலை தடுக்க, பூத் அதிகாரிகளும், செயல்படைகளும் இரண்டு நாட்களில் அமைக்கப்படும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 & 12ம் வகுப்பு முடிவுகள் வெளியீடு – 92.3% மாணவர்கள் தேர்ச்சி!!

கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்திலிருந்து ‘பிளாஸ்மா’ வை பிரித்தெடுத்து நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here