
தற்போது பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலா, கோயில் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்புகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் அந்த கோயில் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாமியை பார்க்க டிக்கெட் எடுத்த போதிலும் பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அதிலும் நேரடி தரிசனம் செய்ய டிக்கெட் பெற்ற பக்தர்கள் 30 மணி நேரம் வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு தேவையான வசதிகளையும், உணவுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.
10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே., துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!!
இதனால் பக்தர்களின் நலன் கருதி தரிசன நேரத்தை குறைக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது வருகிற ஜூன் 15ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் செயல் அதிகாரி தர்மா அறிவித்துள்ளார்.