தமிழகத்தில் அகவிலைப்படியை தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம்.., வெளிவந்த முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் அகவிலைப்படியை தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம்.., வெளிவந்த முக்கிய தகவல்!!
தமிழகத்தில் அகவிலைப்படியை தொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டம்.., வெளிவந்த முக்கிய தகவல்!!

அரசானது பணியில் இருக்கும் போதும், பணியில் இருந்து ஓய்வு பெற்ற போதும் பல்வேறு சலுகைகளை ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நிலையான ஓய்வூதியம் கிடைக்கததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அம்மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியது. மேலும், தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பதி செல்லும் பக்தர்களே.., அலைமோதும் கூட்டத்தால் தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு.., வெளியான தகவல்!!!

இந்த வகையில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் வாக்குறுதியாக திமுக அளித்த “புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து” செய்ய கோரி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளனர். மேலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இறந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணி கொடை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here