“டைம்ஸ்” இதழின் “Kid of the Year” பட்டம் – இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்!!

0

உலகின் புகழ் பெற்ற பத்திரிகை இதழான “டைம்ஸ்” இதழ் இந்திய வம்சாவளியினை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு “Kid of The Year” என்ற பட்டத்தை கொடுத்து தனது பத்திரிகையின் முதல் பக்கத்தில் அவரது உருவப்படத்தை பதிவிட்டு பெருமைபடுத்தியுள்ளது.

டைம்ஸ் இதழ்:

உலகின் மிக சிறந்த பத்திரிகை இதழ் தான் “டைம்ஸ்” இந்த இதழில் தங்களது உருவப்படம் வர வேண்டும் என்பது பலரது கனவு என்று கூட சொல்லலாம். அப்படி மிகவும் பெயர் பெற்ற இந்த இதழ் இந்த ஆண்டு “Kid of The Year” என்ற ஒரு போட்டியினை வைத்து, இந்திய வம்சாவளியினை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு விருது அளித்து பெருமைபடுத்தி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஆண்டு தான் இந்த பட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வெவ்வேறு துறைகளில் இருந்து 5000 மாணவர்களில் கிதாஞ்சலி ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிகவும் சிறு வயதிலேயே பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்ததற்காக அவருக்கு இந்த பட்டம் வழங்கபட்டுள்ளது. இவர் “கைன்ட்லி” என்று ஒரு மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி மூலமாக ஒருவர் ஆன்லைன் துன்புறுத்தல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தப்பித்து கொள்ளலாம். அவர்களுக்கு ஆரம்பத்திலேயே இந்த செயலி எச்சரிக்கையினை தந்து விடும். இது மட்டும் அல்லாமல் அவர் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி அட்டைக்கு மாற விண்ணப்பிக்கலாம்!!

இது குறித்து கீதாஞ்சலி கூறுகையில், “நான் சில கண்டுபிடிப்புகளை செய்துள்ளேன். என்னால் முடியும் என்றால் கண்டிப்பாக அனைவராலும் முடியும். கொரோனா தொற்று காலம் உலகம் முழுக்க பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. நாம் உருவாக்கிய பிரச்சனைகளை நாம் தான் சரி செய்ய வேண்டும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கீதாஞ்சலி ஒரு முன்னுதாரணமாக விளங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here