தமிழகத்தில் டிச.7 முதல் கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0
பள்ளி கல்லூரிகளுக்கு காவல்துறை அறிவித்த தடை உத்தரவு - மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!
பள்ளி கல்லூரிகளுக்கு காவல்துறை அறிவித்த தடை உத்தரவு - மாநிலத்தில் தொடரும் பதற்றம்!!

தமிழகம் முழுவதும் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனை கல்லூரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் செய்யப்படவில்லை. சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் டிசம்பர் 2 முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வரும் டிசம்பர் 7ம் தேதி முதல் இளநிலை கலை, அறிவியல், பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகி உள்ளன.

  • வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும், நீச்சல் குளம் உள்ளிட்ட பகுதிகள் மூடப்பட வேண்டும்.
  • மாணவர் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும்.
  • முடிந்தவரை கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்களின் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம்.
  • முகக்கவசம் அணிந்த படி 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என அரசாணையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here