துருக்கி, சிரியா மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம்., களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

0
துருக்கி, சிரியா மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம்., களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!!
துருக்கி, சிரியா மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம்., களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால், ஏகப்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ஸ்டாலின் பதிவு:

துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம், உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி தென்கிழக்கு பகுதியான சிரியா எல்லையில், நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. இதனால், அங்கிருந்த அனைத்து கட்டிடங்களும் சீட்டு கட்டுகள் போல் சரிந்தன. காசியான்டெப், தியார்பகீர், அடானா மற்றும் கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், 4000 பேர் பலியானதாகவும், 15,000 நபர்கள் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது அங்கு, பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும் பலவும் இவர்களுக்காக தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு., அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

இந்த நிலநடுக்கம் குறித்து பதிவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்த செய்திகளை கேட்டு, மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் ஒன்றிணைவோம் என குறிப்பிட்டார். இது போக, அவர்களுக்கு தாராளமாக உதவிக்கரம் நீட்டுவோம் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here